.

Pages

Friday, September 28, 2018

அதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண்கள் தானம்!

அதிராம்பட்டினம், செப்.27
தஞ்சாவூர் மாவட்டம்,  அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சா.கி பாலையா தேவர் (வயது 82). ஓய்வுபெற்ற மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர். இவர், வயது முதிர்வின் காரணமாக இன்று வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.

சா.கி பாலையா தேவர்
இதையடுத்து, இவரது மகன்கள் அருன்மொழிவர்மன், திருமாவளவன்  மருமகன்கள் கோவி. நடராஜன், வ.விவேகானந்தம், செ.இரவிச்சந்திரன், மகள்கள் தேன்மொழி, மணிமொழி, தாரணி ஆகியோர் அளித்த ஒப்புதலின் பேரில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தலைமையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், மாவட்டத் தலைவர் எம். அகமது, என்.ஆறுமுகச்சாமி, ஆர். மாரிமுத்து ஆகியோர் விரைந்து சென்று, இறந்த சா.கி பாலையா தேவரின் கண்களை தானமாகப் பெற்று, கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கண்களை தானமாக வழங்கிய சா.கி பாலையா தேவர் குடும்பத்தாருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.