.

Pages

Friday, September 21, 2018

அக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விமான நிலையத்தில் மட்டுமே கையாளப்படுவர்!

அதிரை நியூஸ்: செப்.21
எதிர்வரும் அக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தாவின் புதிய விமான நிலையத்தில் மட்டுமே கையாளப்படுவர்

ஜித்தாவில் கட்டப்பட்டு வந்த கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் எனும் அதிநவீன விமான நிலையம் கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாரபூர்வமற்ற முறையில் திறக்கப்பட்டு தினமும் 2 விமானங்கள் வந்து சென்றன. தற்போது சவுதியின் 11 உள்நாட்டு விமான நிலையங்களிலிருந்தும் தினமும் சுமார் 80 விமானங்கள் வந்து செல்கின்றன. எதிர்வரும் வாரங்களில் ரியாத், மதீனா, தம்மாம் ஆகிய நகரங்களிலிருந்தும் விமானங்கள் சேவையை துவங்கவுள்ளன.

நடப்பு ஹஜ் யாத்திரைக்கு ஜித்தா விமான நிலையம் வழியாக மட்டும் சுமார் 2.98 மில்லியன் பயணிகள் வருகை தந்திருந்தனர், இந்த பயணிகள் அனைவரும் எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் தேதியுடன் முற்றாக வெளியேறவுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் ஆரம்பம் முதல் உம்ரா பயணிகள் இந்த புதிய விமான நிலைய ஹஜ் மற்றும் உம்ராவுக்காக டெர்மினல் வழியாக மட்டுமே கையாளப்படுவர், அதேபோல் எதிர்வரும் ஹஜ் யாத்திரை காலப் பயணியரும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.