.

Pages

Tuesday, September 25, 2018

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய அதிநவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் இன்று (25.09.2018) தொடங்கி  வைத்தனர்.

அதிநவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:- 
எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவிகள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை தெளிவாகவும், துல்லியமாகவும் கணிக்க முடியும். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய அதிநவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி இன்றைய தினம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ளது. அதி நவீன எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவியின் மூலம் 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்களுக்குள் முழு உடலையும் ஸ்கேன் செய்து முடிக்க முடியும். சீமன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அதி நவீன எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி குறைவான சத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தன்மை கொண்டதாகும்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே.பாரதிமோகன் (மயிலாடுதுறை), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், முன்னாள் பால் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் காந்தி, முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன்,  முன்னாள் நிக்கல்சன் கூட்டுறவு வங்கித்தலைவர் அறிவுடைநம்பி, முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் சரவணன், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள்,  மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.