.

Pages

Thursday, September 27, 2018

ஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுலா விசா அறிமுகம் ஆனால் ஒரு நிபந்தனை!

அதிரை நியூஸ்: செப். 27
இந்தியர்கள் பயன்படும் வகையில் ஓமன் அரசு 10 நாட்களுக்கான புதிய சுற்றுலா விசாவை ஓமன் அரசு அறிமுகம் செய்துள்ளதுடன் இதன் கட்டணமும் மிக மிக குறைவு. இந்த 10 நாள் விசாவுக்காக கட்டணம் 5 ஒமன் ரியால்கள் மட்டுமே (48 திர்ஹங்கள்).

ஓமனில் ஏற்கனவே 1 மாதம் (விசா கட்டணம் 20 ஓமன் ரியால்கள்) மற்றும் 1 வருட சுற்றுலா விசாக்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதியுள்ள நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த 10 நாள் ஆன்லைன் சுற்றுலா விசாவை பெற உங்களிடம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் செங்கன் நாடுகள் (Schengen Countries) ஏதாவது ஒன்றின் செல்லுபடியாகும் விசா (Valid Visa) இருத்தல் அவசியம் என்ற (எளிய!) நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஓமன் சுற்றுலா விசாக்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க: www.evisa.rop.gov.om

LIST OF SCHENGEN COUNTRIES:
The 26 countries that are currently members of the Schengen agreement are Austria, Belgium, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Italy, Latvia, Liechtenstein, Lithuania, Luxembourg, Malta, Netherlands, Norway, Poland, Portugal, Slovakia, Slovenia, Spain, Sweden, and Switzerland.

செங்கன் நாடுகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள...
https://visareservation.com/schengen-countries-area/

Sources: Times of Oman / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.