.

Pages

Tuesday, September 18, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் மேம்பாட்டுக்குழு கூட்டம்!

அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவ, மாணவிகள் மேம்பாட்டுக்குழு சார்பில், குறைதீர்க்கும் கூட்டம் கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை, கல்லூரி முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமாகிய ஏ.முகமது முகைதீன் தொடங்கி வகித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவ, மாணவிகளின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, பட்டுக்கோட்டை தாலுகா தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கா.தர்மேந்திரா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான நெறிமுறைகள், டி.என்.பி.எஸ்.சி குரூப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிகள், அரசு வேலை வாய்ப்புகள், இட ஒதுக்கீடு முறை பற்றி விளக்கிப் பேசினார்.

முன்னதாக, கல்லூரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவ, மாணவிகள் மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி பேராசிரியர் எம்.பழனிவேல், செய்துருந்தார்.

இக்கூட்டத்தில், கல்லூரி உள்தர மதிப்பீட்டுக்குழு துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ. ஜியாவுதீன், கல்லூரி முன்னாள் பேராசிரியர் எஸ்.ரவீந்திரன், உதவி பேராசிரியர்கள் கே.சுந்தர், பி.ராஜஸ்ரீ,  ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 236 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.