அதிரை நியூஸ்: செப். 20
கடந்த மாதம் நிறைவுற்ற புனித ஹஜ்ஜின் போது பல உறவுகள் மீண்டும் ஒன்று சேர்ந்த நிகழ்வுகள் பல அரங்கேறின. இவற்றில் பல சகோதர சகோதரிகள் பயங்கரவாத இஸ்ரேல் பாலஸ்தீன மண்ணை ஆக்கிமித்ததினால் பிரிந்தவர்கள்.
இந்த வருட ஹஜ்ஜிற்கு பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மன்னர் சல்மானின் செலவில் ஹஜ்ஜிற்கு அழைத்து வரப்பட்ட 1,000 பாலஸ்தீனியர்களில் சகோதரி புஷ்ரா அவர்களும் ஒருவர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் சமீர் அவர்களும் இந்த வருட ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திருந்தார். இவர்கள் இருவருக்குமிடையே எத்தகைய தொடர்புகளும் கடந்த 15 ஆண்டுகளாக இல்லை என்பதுடன் இந்த வருட ஹஜ்ஜில் சந்தித்துக் கொள்வதற்கும் எத்தகைய திட்டமிடல்களுடனும் வரவில்லை.
மினாவில் தங்கியிருந்த போது அல்லாஹ்வின் அருளால் தங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிந்து ஆனந்தக் கண்ணீருடன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவர்களாக ஒன்றிணைந்தனர் இந்த இளவல்கள்.
இதேபோல் கடந்த 14 ஆண்டுகளாக சந்தித்துக் கொள்ளாத முஸா, லத்தீபா ஆகிய பாலஸ்தீனிய சகோதர சகோதரிகளும் புனித மக்காவில் சந்தித்துக் கொண்டனர். இந்த இளவல்கள் 2 வயதினராய் இருக்கும் போது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் லெபனானுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர். சுமார் 16 வருடங்களுக்கு முன் சகோதரி லத்தீபா எகிப்துக்கு சென்றுவிட இவர்களுக்கு இடையேயான உறவு முற்றாக அறுபட்டுபோனது.
இந்நிலையில், மன்னர் சல்மானின் உதவியோடு ஹஜ்ஜிற்கு வந்த சகோதரர் மூஸாவும், எகிப்திருந்து தனது மகன் பஸ்ஸாமுடன் வந்திருந்த லத்தீபாவும் ஒன்று சேர்ந்த அருமையான நிகழ்வும் அரங்கேறியது. தாய்மாமன் மூஸா கடைசியாக மருமகன் பஸ்ஸாமை பார்க்கும் போது வயது ஒன்று மட்டுமே.
Sources: Saudi Gazette / Arab News / The News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.