.

Pages

Thursday, September 20, 2018

தஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் போக்குவரத்து துறை சார்பில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைகவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (20.09.2018) நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரின் அறிவுரைப்படியும் இரு சக்கர வாகன ஒட்டிகளும், பின் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைகவசம் அணிவது குறித்தும், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாகவும்  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும்  பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன் கலைக்குழுவினரால் “சித்திரகுப்தனும் எமதர்ம ராஜாவும்” என்ற தலைப்பில் இரு சக்கர வாகன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் போது பேருந்து நிலையங்களுக்கு வந்த பயணிகள், பொது மக்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோருக்கு தஞ்சாவூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் அவர்களால் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுந்தரராமன், கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.