.

Pages

Monday, September 24, 2018

துபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்திற்குரிய மனிதர்!

அதிரை நியூஸ்: செப்.24
குலாம் அப்பாஸ் என்கிற துபைவாழ் எஞ்சினியர் ஒருவருக்கு திடீரென உடல் எடை குறைந்ததுடன் அடிக்கடி வாந்தி வந்ததை தொடர்ந்து துபை அரசின் ராஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடலில் Gastric cancer / colon cancer என்கிற புற்றுநோய் மிகக்கடுமையாக பாதித்துள்ளதாகவும், உடனடியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடலை அகற்றாவிட்டால் உயிரைக் காப்பாற்ற முடியாது என தெரிவித்துவிட்டனர்.

6 வயது மகளுக்கும் 1 ½ வயது மகனுக்கும் தந்தையான குலாம் அப்பாஸ் தன்னுடைய குழந்தைகள் வளர்வதை கண்ணாரக் காண வேண்டும் என்ற இயல்பான ஆசையில் குடல் நீக்க அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் தான் இறுதியாக 1 பிளேட் கோழி பிரியாணியை உண்ண வேண்டும் என்ற தனது இறுதி ஆசையை மருத்துவர்களிடம் வெளியிட, மனைவி அன்போடு சமைத்துத் தர சகோதரன் பரிமாறவென தனது இறுதி சாப்பாட்டை பிரியாணியுடன் முடித்தார். "I asked the doctor if I could have chicken biryani as my last meal before the surgery. My wife prepared it and my brother carried it to the hospital. I sort of gorged on it," he said

தற்போது குடல் நீக்க அறுவை சிகிச்சைக்குப் பின் ராஷித் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவரும் குலாம் அப்பாஸ் வெறும் நீராகரங்களையே பருகி வருகிறார். அதெப்படி குடல் நீக்கம் செய்தபின் அவரால் நீர் பருக முடிகிறது என ஆச்சரியப்படுகின்றீர்களா? அவரது வயிற்றில் எஞ்சியுள்ள சிறுகுடல் பகுதியை தான் மருத்துவர்கள் ஓரளவு சரிசெய்து பெருங்குடல் நீக்கப்பட்ட பகுதியுடன் இணைத்து வைத்துள்ளனர்.Laparoscopically removed the total stomach and the lymphatic drainage system from the root, then reconstructed the whole area in such a way that the small bowel (small intestine) functions as the stomach

எனவே, இனி அவரால் கனமான மற்றும் காரமான உணவுகள் எதையும் எடுத்துக் கொள்ள முடியாது. உணவுகளை வேளாவேளைக்கு சாப்பிட முடியாது மாறாக நாள் முழுவதும் மிக மிகச்சிறிது சிறிதாகத் தான் நன்கு மென்று விழுங்க இயலும். It is normal to question how a person can live without a stomach. However, the body is able to bypass the stomach's main function of storing and breaking down food to gradually pass to the intestines. Without a stomach, food consumed in small quantities can move directly from the oesophagus to the small intestine.

என் குழந்தைகளுக்காக இந்த சிரமத்தை நான் பழகிக் கொள்வேன் என நம்பிக்கை தெரிவிக்கின்றார் குலாம் அப்பாஸ்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.