அதிராம்பட்டினம், செப்.20
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், தொடர் சேவைத் திட்டங்கள் கடந்த செப்.17 ந் தேதி தொடங்கி வரும் செப்.30 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, சேவைத்திட்ட வரிசையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை ஐகேர் ஆப்டிக்கல்ஸ் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்கள் ~ பெற்றோருக்கான கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் இன்று (செப்.20) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளித் தாளாளர் எம். உதயகுமார், லயன்ஸ் சங்கம் முன்னாள் தலைவர் பேராசிரியர் கே. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை, லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் கே. ஸ்ரீராம் தொடங்கி வைத்தார். முகாமில் பட்டுக்கோட்டை ஐகேர் ஆப்டிக்கல்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் காசிவிஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 1100 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில், கண்களில் குறைபாடுகள் கண்டறியபட்டோருக்கு இலவசமாக சொட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், 27 பேர் பட்டுக்கோட்டை ஐகேர் ஆப்டிக்கல்ஸ் கண் மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், முன்னாள் தலைவர் என்.ஆறுமுகச்சாமி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.