.

Pages

Saturday, September 29, 2018

வடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சிக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழையையொட்டி தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், முதல் உதவியாளர்கள், மீனவர்கள்  மற்றும் அலைபேசி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக் கூட்டம்  இன்று (29.09.2018) நடைபெற்றது

பேரிடர் மேலாண்மை பயிற்சிக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது : -
வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழைக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொது மக்களுக்கு சேவை வழங்கிடும் அனைத்து தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.  மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள், பாதிப்பின் தன்மையை பொறுத்து மிக அதிக அளவு, அதிக அளவு, மிதமான அளவு, குறைந்த அளவு என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  மொத்த வருடாந்திர மழையளவில் 48 சதவிகிதம் மழை அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவத்தில்  பெய்கிறது.  மேலும், இப்பருவத்தில் தான் புயல் சின்னங்கள் உருவாகின்றன.  வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்வதற்கு தேசிய அளவில் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையும், மாநில அளவில் மாநில பேரிடர் மேலாண்மை முகமையும், மாவட்ட அளவில் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையும் செயல்படுகின்றன. பொது மக்களை கனமழையின் பாதிப்பிலிருந்து காப்பதற்கு  அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களில் மின்சார இணைப்புகள், மேல்நிலை நீர்தேக்கதொட்டிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை முறையாக பராமரித்திட வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அவசர கால பயிற்சிகளை வழங்கிட வேண்டும். மருத்துவமனைகளில் அவசர காலத்தில் தேவைப்படும்  ஜெனரேட்டர் வசதிகளை, தரை தளத்தில் வைக்காமல் முதல் தளத்தில் வைத்திட வேண்டும். மழை காலத்தில் தனியார் அலைபேசி நிறுவனங்களின் கோபுரங்கள் செயல்படுவதற்கு தேவையான டீசல் எரிபொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளக்காலங்களில் மீனவர்களும், முதல் உதவியாளர்களும், படகுகள் மற்றும் அத்தியாவசியமான மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), மகாலெட்சுமி (பட்டுக்கோட்டை), மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் கண்ணன், தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள், அலைபேசி நிறுவன நிர்வாகிகள், மீனவர்கள் மற்றும் முதல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.