.

Pages

Thursday, September 20, 2018

அபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச டேக்ஸி சேவை!

அதிரை நியூஸ்: செப்.20
அபுதாபி எமிரேட்டின் முஸஃபா ஏரியா கட்டிடங்கள், தொழிற்பேட்டைகள், தொழிலாளர் குடியிருப்புக்கள், பரபரப்பான சாலைகள், பள்ளிக்கூடங்கள் என நிறைந்துள்ள பகுதியாகும். இங்கிருந்து தலைநகர் அபுதாபிக்கு செல்ல தனியார் வாகனங்கள், அனுமதியற்ற டேக்ஸிக்கள், ஊர்ந்து செல்லும் பேருந்துகள் என்பனவற்றையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், ஆரம்ப கட்டடாக முஸஃபாவிலுள்ள மஜியாது மால் (Mazyad Mall), முஸஃபா துறைமுகம் (Musaffah Port), டல்மா மால் (Dalma Mall), ஐகாட் (ICAD) உள்ளிட்ட பல தொழிலாளர் குடியிருப்புக்கள் (Labour Accommodations) போன்ற பகுதிகளில் உள்ளவர்களை ஷாபியாவிலுள்ள நகரப் பேருந்து நிலையம் (Musaffah Main Bus Terminal @ Shabiya) மற்றும் ஆங்காங்கு உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கு கொண்டு விட M1, M2, M3, & M4 ஆகிய 4 தடங்களில் இலவச டேக்ஸிக்களை இயக்கி வருகிறது அபதாபி போக்குவரத்து துறை (Dot Link).

இந்த அறிமுக இலவச டேக்ஸிக்களின் வெற்றியை பொறுத்து அபுதாபியின் பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை இந்த இலவச டேக்ஸி சேவை வழங்கப்படுகின்றது. இந்த மினி பஸ் சேவை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

நீல நிறமும் வெள்ளையுமாக கலந்து காணப்படும் இத்தகைய வாகனங்களின் இருபுறமும் Hail & Ride என்று எழுதப்பட்டிருக்கும். இவை இலவச மினி பஸ்கள் என போக்குவரத்து துறையால் (Dept. of Transport) - DOT) அழைக்கப்படுகின்றது.

மேலும் முஸஃபாலிருந்து தலைநகர் அபுதாபிக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண்கள் 103, 104 மற்றும் பயணிகளின் அபிமானத்தை பெற்ற L10 ஆகிய சேவைகளும் தடாலடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை முஸஃபாவிலிருந்து அபுதாபி சர்வதேச விமான நிலைய முனையங்கள் 1 & 2க்குச் செல்ல தடம் எண் A10 என்ற புதிய சேவையும் துவக்கப்பட்டுள்ளது.

துபையிலிருந்து பேருந்து மூலம் முஸஃபா வருபவர்கள் தலைநகர் அபுதாபி சென்றுவிட்டு அங்கிருந்து நகரப் பேருந்துகளில் மிகவும் சிரமப்பட்டு வந்தவர்கள் இனி ஸஹாமாவிலேயே (Shahama) இறங்கி அல் ரஹ்பா மருத்துவமனையிலிருந்து (Al Rahba Hospital) புறப்பட்டு வரும் தடம் எண் 210 என்ற பேருந்தில் ஸஹாமாவிலிருந்து ஏறி முஸஃபாவில் இறங்கிக் கொள்ளலாம். இந்த சேவை டெல்மா மால் வரை உண்டு. ஒருமணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற கணக்கில் இயக்கப்பட்டு வருகிறது.

Source: Khaleej Times / The National
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.