அதிரை நியூஸ்: செப்.27
அமீரகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையில் பூங்காக்களில் தங்கியிருந்த சுமார் 40 இந்தியர்கள் மீட்க்கப்பட்டனர்
அமீரகத்தில் ஏஜென்ட்டுகளால் ஏமாற்றப்பட்டும் வேலைகளை இழந்தும் ஆதரவற்ற நிலையில் வட அமீரகப் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் (Public parks) தங்கிக் கொண்டும், படுத்துறங்கிக் கொண்டும், உணவுக்காக பிறரின் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டுமிருந்த சுமார் 40 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் சிலர் 2 முதல் 3 ஆண்டுகளாக இவ்வாறு தங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது, இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்களில் பலர் வேலை தேடி 1 மாத விசிட் விசாவில் வந்தவர்கள்.
இவர்களின் நிலை குறித்து எதார்த்தமாக அறிந்த இந்திய சமூக ஆர்வலர் ஒருவர் (A community welfare group named Ekata) சமூக வலைத்தளத்தில் நேரலையாக படம்பிடித்து ஒளிபரப்பியதை தொடர்ந்து பல்வேறு இந்தியர்களும் இந்திய தூதரகமும் உதவ முன்வந்தன.
மீட்கப்பட்ட 40 பேரும் அமீரகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் பொதுமன்னிப்பை பயன்படுத்தி எத்தகைய அபராதங்களும் இன்றி நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர் என்றும் அதுவரை அவர்களுக்கான உணவு, இருப்பிடம் தூதரகத்தின் சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.