.

Pages

Sunday, September 23, 2018

துபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை பொருட்காட்சி!

அதிரை நியூஸ்: செப்.23
துபையில் ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 (Gitex Shopper - Autumn) எனும் தொழிற்நுட்ப சாதனங்களின் விற்பனை பொருட்காட்சி

துபையில் வருடத்தில் 2 முறை என நடத்தப்படும் ஜீடெக்ஸ் ஷாப்பர் (Gitex Shopper - Autumn) எனப்படும் லேட்டஸ்ட் தொழிற்நுட்ப சாதனங்களின் விற்பனை பொருட்காட்சி எதிர்வரும் 2018 அக்டோபர் 2 முதல் 6 வரை நடைபெறும். துபை வேல்டு டிரேட் சென்டரில் அல் ஜபீல் ஹால் எண்கள் 4-6 இந்த பொருட்காட்சி வழமைபோல் நடைபெறவுள்ளது.

நுழைவு கட்டணம் 20 திர்ஹம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிமுதல் இரவு 11 வரை திறந்திருக்கும். இங்கு சந்தையில் இறக்குமதியாகியுள்ள அதிநவீன மின் சாதனங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், கம்ப்யூட்டர்கள், கேட்ஜெட்டுகள் என ஏராளமான நவீன பொருட்களை விற்பனைக்காக வியாபாரிகள் குவித்து வைத்திருப்பர்.

வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் இந்நிகழ்வு ஏப்ரல் மாதத்திலும் (Gitex Shopper - Summer) அக்டோபர் மாதத்திலும் (Gitex Shopper - Autumn) தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. அமீரகத்தின் பிரசித்தி பெற்ற அனைத்து பெரிய நிறுவனங்களும் இதில் பங்குபெறுவதுடன் அதிரடி பரிசுகளையும் அள்ளி வழங்கும்.

Source: https://www.gitexshopperdubai.com/
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.