அதிராம்பட்டினம், செப்.17
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான 'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கட்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து சிறப்புரை நிகழ்த்தினார். இதில், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் பற்றியும், உடல், உள்ளம், உடை தூய்மை பற்றி விளக்கிப் பேசினார். இதில், கை கழுவும் முறை, கை, கால் விரல் நகங்கள் அகற்றுவது, கால் பாதம் பராமரிப்பு, குடிநீர் அருந்தும் முறை உள்ளிட்ட பல்வேறு சின்னச் சின்ன செய்திகளை மாணவர்களுக்கு அறிவுரையாக வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை பி.எம்.எஸ் பெட்ரோல் பங்க் நிறுவனர் பி. முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் என்.ரகுபதி, சுப்பையன் செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், முன்னாள் தலைவர் என்.ஆறுமுகச்சாமி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.