.

Pages

Saturday, September 29, 2018

அமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமானம் வழங்கிய 50% கட்டண சலுகை ரத்து!

அதிரை நியூஸ்: செப்.29
அமீரகத்திருந்து இறந்த உடல்களை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டு செல்ல வழங்கப்பட்ட 50% கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு செல்ல பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் பல்வேறு வவையான கட்டணங்களை வசூலித்து வருகின்றன. அதன்படி ஒரு உடலை இந்தியா கொண்டு செல்ல சுமார் 2,500 முதல் 3,000 திர்ஹங்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏர் இந்திய விமானத்தில் மட்டும் அமீரகத்திலிருந்து இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல 50 சதவிகிதம் கட்டணச்சலுகை இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையை ஏர் இந்தியா நிறுவனம் அமீரகம் மற்றும் இந்தியத் தடங்களுக்கு இடையே மட்டுமே வழங்கிவந்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் கார்கோ பிரிவு தலைமையகம் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் இந்த உத்தரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டணம் செலுத்த வழியில்லாத ஏழைத் தொழிலாளர்களின் உடல்களை இந்திய தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் இலவசமாக சுமந்து செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏழைகளின் உடல்களுக்கான டிக்கெட் கட்டணத்தை இந்திய தூதரகம் அமீரகம்வாழ் இந்தியர்களிடமிருந்து வசூலித்துவரும் இந்திய சமூக நலநிதியிலிருந்து (Indian Community Welfare Fund - ICWF) தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் புதிய உத்தரவை தொடர்ந்து இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி அவர்கள், இந்திய தூதரகம் தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கட்டணம் செலுத்த இயலாத ஏழைத்தொழிலாளர்களின் உடல்களுக்கான கட்டணத்தை இந்திய சமூக நலநிதியிலிருந்து (ICWF) செலவிடும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். நடப்பு வருடம் மட்டும் இதுவரை 49 உடல்களை இந்திய சமூக நலநிதியை கொண்டு இந்திய தூதரகம் அனுப்பியுள்ளது.

கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:
நாசர் கன்ஹன்காடு (Nasar Kanhangad) என்ற சமூக ஆர்வலர் இந்த சலுகை கட்டண ரத்தை ஏர் இந்தியா நிறுவனம் மறுபரிசீலணை செய்ய வேண்டும் எனவும் இந்தியர்களின் உடல்களை இந்திய அரசு இலவசமாகவே கொண்டு செல்ல ஆவண செய்ய வேணடும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அஷ்ரப் தாமரசேரி (Ashraf Thamarasherry) என்ற இன்னொரு சமூக ஆர்வலர் கூறியதாவது, உதாரணத்திற்கு ஒருவருடைய உடலை கேரளா கொண்டு செல்ல சுமார் 1,800 முதல் 2,500 வரை கார்கோ செலவாகிறது. ஒருவருடைய உடல் 80 கிலோ இருக்குமென்றால் அவரை அனுப்புவதற்கான பெட்டி சுமார் 60 கிலோ வரை இருக்கும். ஆக மொத்தம் 140 கிலோக்குரிய கட்டணத்தை இனி செலுத்த நேரிடும் என்பதால் இக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

நசீர் வட்டனப்பள்ளி (Naseer Vatanapally) என்ற இன்னொரு சமூக ஆர்வலர் தெரிவித்ததாவது, இதற்கெனதொரு ஏற்கத்தக்க கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் ஏனெனில் எல்லோராலும் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுப்ப இயலாது எனத் தெரிவித்தார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.