.

Pages

Sunday, September 23, 2018

ஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் சேவை அக்.1 முதல் தொடக்கம்!

அதிரை நியூஸ்: செப்.23
ஜித்தா, மக்கா, மதினா இடையேயான ஹரமைன் அதிவேக ரயிலின் பயணிகள் போக்குவரத்து அக்.1 முதல் அதிகாரபூர்வமாக துவங்குகிறது

ஜித்தா, மக்கா, மதினா இடையே நீண்டநாட்களாக நடைபெற்று வந்த ஹரமைன் அதிவேக ரயில் போக்குவரத்திற்கான கட்டமைப்புக்கள் நிறைவடைந்தததை தொடர்ந்து பயணிகள் போக்குவரத்து இத்தடத்தில் அதிகாரபூர்வமாக எதிர்வரும் 2018 அக்டோபர் 1 முதல் துவங்குகிறது. தினமும் இருபுறமும் தலா 4 சேவைகள் என மொத்தம் 8 ரயில் சேவைகள் நடைபெறும்.

இந்த ஹரமைன் அதிவேக ரயில் சேவைகள் வாரந்தோறும் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்களில் மட்டும் நடைபெறும் என்றும், இந்த சேவைகளுக்கான கால அட்டவணை எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழிக்கான டிக்கெட் கட்டண விபரங்கள்:

டூரிஸ்ட் வகுப்பில் ஜித்தா சுலைமானியா முதல் மக்கா வரை செல்ல : 20 ரியால்

பிஸ்னஸ் வகுப்பில் ஜித்தா சுலைமானியா முதல் மக்கா வரை செல்ல : 25 ரியால்

டூரிஸ்ட் வகுப்பில் மக்கா முதல் மதினா வரை செல்ல : 75 ரியால்

பிஸ்னஸ் வகுப்பில் மக்கா முதல் மதினா வரை செல்ல : 125 ரியால்

டூரிஸ்ட் வகுப்பில் ஜித்தா முதல் மதினா வரை செல்ல : 63 ரியால்

பிஸ்னஸ் வகுப்பில் ஜித்தா முதல் மதினா வரை செல்ல : 105 ரியால்

டூரிஸ்ட் வகுப்பில் ராபிஹ் முதல் மதினா வரை செல்ல : 50 ரியால்

பிஸ்னஸ் வகுப்பில் ராபிஹ் முதல் மதினா வரை செல்ல : 75 ரியால்

2019 ஆம் ஆண்டு முதல் வாரம் 4 சேவைகள் என்பது முழுமையாக மாற்றப்பட்டு தினசரி சேவைகளாக அதிகரிக்கப்படும். அதேபோல் ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்திற்கான ரயில்வே கட்டுமானங்கள் நிறைவடைந்த பின் ரயில் சேவைகள் உடனடியாக துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரமைன் ரயிலுக்கான டிக்கெட்டுக்களை அக்டோபர் மாதம் முதல் Haramain High Speed Train Project என்ற இணையதளத்தில் கிடைக்கும் என்பதுடன் கூடுதலாக இதற்கென ஒரு ஆப் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

ஜித்தா சுலைமானியா ரயில் நிலையத்தில் மணிக்கு சுமார் 25,000 பயணிகளையும், மக்காவின் புனித மஸ்ஜிதுல் ஹரமைனிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மக்கா அல் ருஸைஃபா நிலையத்தில் மணிக்கு சுமார் 20,000 பயணிகளையும், மதினாவின் மஸ்ஜிதுன்னபவி பள்ளியிலிருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் மணிக்கு 4,000 பயணிகளையும் கையாளும் திறனுள்ளது.

சுமார் 37.5 பில்லியன் ரியால் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையின் தூரம் 450 கி.மீயாகும். இந்தத் தடத்தில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.