.

Pages

Saturday, September 22, 2018

துவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதிமொழி ஏற்பு ~ ஆட்சியர் பங்கேற்பு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் பள்ளி மாணவர்களின் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை கலந்து கொண்டார்.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், துவரங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு தூய்மையாக இருப்பதன் அவசியம் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் எடுத்துரைத்தார். தொடர்ந்து, துவரங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும், துவரங்குறிச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், இந்திய சுற்றுலா கழக  உதவி இயக்குநர் தனியரசு, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன், பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுப்ரமணியன், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன், வட்டாட்சியர் சாந்தகுமார் (பட்டுக்கோட்டை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும்  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.