.

Pages

Saturday, September 29, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் !

அதிராம்பட்டினம், செப். 29
காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையம் சார்பில், மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் மதுரை ஓரியன் எடுடெக் நிறுவன தலைமைப் பயிற்றுநர் எஸ். அமீன் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். இதில், மாணவ, மாணவிகள் நேர் காணலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், ஆங்கிலத்தில் உரையாடுவதற்கான பயிற்சி குறித்தும், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற தேவையான வழிமுறைகள் பற்றி விளக்கப்பட்டது.

முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் செய்துருந்தார். பயிற்சி முகாமில், கல்லூரி முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.