தஞ்சாவூர் மாவட்டம், 01.10.2017 முதல் 30.08.2018 வரை புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை நேரடியாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் 01.01.2018-ஐ தகுதி நாளாகக் கொண்டு புதிதாக பெயர் சேர்க்க 01.10.2017 முதல் 30.08.2018 வரை விண்ணப்பித்த தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் பெயர் சேர்க்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 01.09.2018 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது;
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை அரசு இ-சேவை மையம் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள 52739 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அவர்களின் நலன் கருதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களின் முகவரியில் நேரடியாக சென்று வழங்க அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
01.09.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுலவர்கள் (BLO) வாக்காளர்களின் முகவரியில் புதிய வாக்காளர் அடையாள அட்டையினை கட்டணம் ஏதுமின்றி 27.09.2018 முதல் வழங்கவுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.