அதிராம்பட்டினம், ஏப்.21
அதிராம்பட்டினத்தில் பகல் முழுவதும் 10 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சீரான மின் விநியோகத்தை வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவால், அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்களின் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் இன்று (ஏப்.21) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. சுமார் 4 மணி நேர இடைவெளிக்கு பின், மீண்டும் காலை 8 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும் காலை 9.30 மணியிலிருந்து, 10.30 மணி வரையும், காலை 11.30 மணியிலிருந்து பகல்1.30 மணி வரையும், பிற்பகல் 2.15 மணியிலிருந்து 3.15 மணி வரையும், மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை என 10 மணி நேர மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்தன. சீரான குடிநீர் பெறுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. குழந்தைகள், வயோதிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் கூறியது;
ஊரடங்கு காலத்தில் கடும் அவதிக்குள்ளாகி வரும் எங்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது இந்த 10 மணி நேர மின்தடை. எனவே, மின்சார வாரியம் மின் பழுதை விரைவாக சீர் செய்து, சீரான மின் விநியோகத்தை அதிராம்பட்டினம் பகுதிக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மின்சார வாரிய அலுவலக தரப்பில் தெரிவித்தது;
காரைக்குடியிலிருந்து வரும் உயர் அழுத்த மின் பாதையில் இரு வேறு இடங்களில் திடிரென ஏற்பட்ட பழுதால் மின்தடை ஏற்பட்டது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் போர்கால அடிப்படையில் பழுதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், பழுது சீர் செய்து, சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.