.

Pages

Wednesday, April 15, 2020

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில்,120 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.15
கரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் இரவு, பகல் பாராமல் களப்பணியாற்றி வரும், தூய்மைப் பணியாளர்கள் 120 பேருக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், மதிய உணவு இன்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

மேலும், அதிராம்பட்டினம் பேரூர் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல், செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது, மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், எம் அகமது, சங்க இயக்குநர் எஸ்.ஏ அப்துல் ஹமீது மற்றும் பி.உமா சங்கர், முகமது அபூபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.