அதிரை நியூஸ்: ஏப்.12
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூபாய் 750 விலையில் 25 அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கூட்டுறவுத்துறை மூலம் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அத்தியாவசிய மளிகைப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக ரூபாய் 750 விலையில் 25 அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, தொலைபேசி மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று இலவச டோர் டெலிவரி செய்யப்படுகிறது.
அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பில் ரூபாய் 16 மதிப்பிலான 100 கிராம் மஞ்சள் தூள், ரூபாய் 27.5 மதிப்பிலான 100 கிராம் மிளகாய்த்தூள், ரூபாய் 17.5 மதிப்பிலான 100 கிராம் மல்லித்தூள், ரூபாய் 7 மதிப்பிலான 100 கிராம் கடுகு, ரூபாய் 16 மதிப்பிலான 100 கிராம் சோம்பு, ரூபாய் 24 மதிப்பிலான 100 கிராம் சீரகம், ரூபாய் 20 மதிப்பிலான 50 கிராம் மிளகு, ரூபாய் 7 மதிப்பிலான 100 கிராம் வெந்தயம், ரூபாய் 47.5 மதிப்பிலான 500 கிராம் துவரம்பருப்பு, ரூபாய் 66 மதிப்பிலான 500 கிராம் பாசிபருப்பு, ரூபாய் 37.5 மதிப்பிலான 500 கிராம் கடலை பருப்பு, ரூபாய் 45 மதிப்பிலான 500 கிராம் கருப்பு உளுந்தம்பருப்பு, ரூபாய் 43.80 மதிப்பிலான 500 கிராம் பொட்டு கடலை, ரூபாய் 67.5 மதிப்பிலான 500 கிராம் பச்சை பட்டாணி, ரூபாய் 40 மதிப்பிலான 500 கிராம் வெள்ளை கொண்டை கடலை, ரூபாய் 55 மதிப்பிலான 500 கிராம் கோதுமை மாவு, ரூபாய் 25 மதிப்பிலான 500 கிராம் வெல்லம், ரூபாய் 15.7 மதிப்பிலான 20 கிராம் முந்திரி, ரூபாய் 12.5 மதிப்பிலான 20 கிராம் திராட்சை, ரூபாய் 5 மதிப்பிலான 1 கிலோ கல்உப்பு, ரூபாய் 102 மதிப்பிலான 1 லிட்டர் சன்பிளவர் ஆயில், ரூபாய் 19 மதிப்பிலான 100 கிராம் ஊட்டி டீத்தூள், ரூபாய் 10 மதிப்பிலான 1 கிலோ தூள் உப்பு, ரூபாய் 13.5 மதிப்பிலான 200 கிராம் சேமியா, ரூபாய் 10 மதிப்பிலான 10 கிராம் பெருங்காயத்தூள் என 25 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் உள்ளது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 9994728137 மற்றும் 9500802375 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு ரூபாய் 750 மதிப்பிலான அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.