.

Pages

Thursday, April 9, 2020

செங்கிப்பட்டியில் கரோனா தடுப்பு தனிமைப்படுத்துதல் மையம்: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்.09
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா தடுப்பு தனிமைப்படுத்துதல் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்திட தற்காலிக தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் 120 படுக்கை வசதிகளும், மாணவியர் விடுதியில் 100 படுக்கை வசதிகளும் என முதற்கட்டமாக மொத்தம் 220 படுக்கை வசதிகள் தற்காலிக தனிமைப்படுத்துதல் மையத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 47 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என 54 நபர்கள் செங்கிப்பட்டி தற்காலிக தனிமைப்படுத்துதல் மையத்தில் தங்க வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக தனிமைப்படுத்துதல் மையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், படுக்கை வசதிகள், மருத்துவ உபகரண வசதிகள், மருந்து கையிருப்பு விவரங்கள், பாதுகாப்பு உபகரண வசதிகள் ஆகியவை குறித்து சுகாதாரத்துறை அவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், செங்கிப்பட்டி தற்காலிக தனிமைப்படுத்துதல் மையத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுத்திட மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தினார்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்படும் உணவின் தரத்தை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்கு வசதியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு அளித்திடவும், போதுமான வசதிகளை ஏற்படுத்தவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.