அதிரை நியூஸ்: ஏப்.14
தஞ்சாவூர் மாவட்டத்தில் 16 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகர பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், கும்பகோணம் ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், திருவையாறு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், திருவோணம் ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஒரு நபர், தஞ்சாவூர் மாநகராட்சியைச் சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் 11 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்று (13.04.2020) ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும், இன்று (14.04.2020) தொடர் கண்காணிப்பில் இருந்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 3 நபர்கள் மற்றும் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் என 4 நபர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 16 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 12 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் 75 பேருக்கு ஸ்வாப் பரிசோதனை எனப்படும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம், 2 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதும், 61 நபர்களுக்கு நோய்த்தொற்று இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 11 நபர்களுக்கான ஸ்வாப் மருத்துவ பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
மேலும், கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 12 நபர்களின் தொடர்பில் இருந்த 301 பேருக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டதில், 102 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லையென கண்டறியப்பட்டுள்ளது. 171 நபர்களின் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. 28 நபர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
இன்று (14.04.2020) கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 4 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்பிலிருந்த நபர்கள் குறித்து கண்டறியப்பட்டு தனிமைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.