தஞ்சாவூர், ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சமூக இடைவெளியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 15 பேர் மட்டுமே கலந்து கொண்ட திருமணம் நடைபெற்றது.
பேராவூரணியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் பிரபல பழக்கமிஷன் மண்டி உரிமையாளர். இவரது மகள் ஆஷிபாவிற்கு திருமணம் செய்வதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பிரமாண்டமாக 5 ஆயிரம் அழைப்பிதழ் அச்சடித்து வெளியூரைச்சேர்ந்த உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த மண்டபத்தில் நடத்த முடியாத நிலையில், அதனை ரத்து செய்தார். ஆனால், திருமணத்தை தள்ளி வைக்காமல் மண்டபத்தை ரத்து செய்துவிட்டு வீட்டில் நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 16 முதல் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அடையாள அட்டை அடிப்படையில் பொதுமக்கள் வெளியில் வரவேண்டும் எனவும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்படாது, எனவே பொதுமக்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை வெளியில் வரக்கூடாது என அரசு அறிவித்தது.
இதனால் திருமணத்தை தள்ளி வைக்காமல் எளிமையாக நடத்த முடிவு செய்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் அரசு அனுமதி பெற்று 5
பேர் மணமகனுடன் அதிகாலையில் பேராவூரணி வந்துவிட்டனர்.
பெண் வீட்டு தரப்பில் 10 பேர்கள் மட்டும் இருந்து காலை 7 மணியளவில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இது குறித்து மணமக்கள் வீட்டார் கூறியது, மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்த வேண்டுமென திட்டமிட்டிருந்தோம், கொரோனாவால் அரசு உத்தரவை மதித்து எளிய முறையில் திருமணத்தை நடத்தினோம்" என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.