.

Pages

Wednesday, April 22, 2020

மீனவர்கள் வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணம்: மாவட்ட நிர்வாகம் தகவல்!

அதிரை நியூஸ்: ஏப்.22
COVID -19 வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நிமித்தமாக தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1000-வீதம் சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட உள்நாட்டு மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மீனவர் நலவாரியம் மூலம் ரூ.1000- சிறப்பு நிவாரண உதவித் தொகை கிடைக்கப்பெறவில்லை எனில், மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு (தொலைபேசி எண்: 04362-235389) தங்களுடைய மீனவர் நலவாரிய அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
                                                                   
மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்
மீன்துறை உதவி இயக்குநர்
837/4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல்,
தஞ்சாவூர்.
தொலைபேசிஎண்: 04362-235389

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.