.

Pages

Monday, April 6, 2020

அதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடும் PFI தன்னார்வலர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கல்!

அதிராம்பட்டினம், ஏப்.06
அதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் தன்னார்வலர்களுக்கு அரசு அடையாள அட்டை இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் சேவையாற்ற விருப்பம் தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் அதிராம்பட்டினம் பகுதி செயல்வீரர்கள் 25 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும் அரசின் அடையாள அட்டைகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு வழங்கினார். அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், வழக்குரைஞர் இசட்.முகமது தம்பி, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பகுதி தலைவர் எஸ்.முகமது ஜாவித் ஆகியோர் உடன் இருந்தார்.

அதிராம்பட்டினம் பேரூர் பகுதி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுதல், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு அலுவலர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், தங்கள் அமைப்பைச் சேர்ந்த 50 தன்னார்வலர்கள் அதிராம்பட்டினம் பகுதியில் சேவையாற்ற தயார் நிலையில் இருப்பதாக பிஎப்ஐ அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.