.

Pages

Wednesday, April 22, 2020

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 550 நிவாரணப் பெட்டகங்கள் வழங்கல்!

அதிரை நியூஸ்: ஏப்.22
இந்தியன் ரெட் க்ராஸ் சொசைட்டி சார்பில், 18 வகையான வீட்டு உபயோகப்பொருட்கள் அடங்கிய ரூபாய் 750 மதிப்பிலான நிவாரண பொருட்கள் அடங்கிய 550 நிவாரண பெட்டகங்களும், சென்னை தி புளு அம்பர்லா தொண்டு நிறுவனம் சார்பில் 500 முகக் கவசங்களும், சேவாலியா தொண்டு நிறுவன தஞ்சாவூர் கிளையின் சார்பில் கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 1,60,000 மதிப்பிலான 100 முழு பாதுகாப்பு கவச உடைகளும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில், தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்புக்குழு அலுவலர் எம்.எஸ்.சண்முகம் அவர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது, தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்புக்குழு காவல்துறை தலைவர் சாரங்கன் உடன் இருந்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தினை மண்டல கொரோனா தடுப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளின்போது தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.