.

Pages

Monday, April 27, 2020

அதிரையில் சமூக இடைவெளி கடைபிடிக்காத 5 கடைகளைத் திறக்கத் தடை: பேரூராட்சி நடவடிக்கை!

அதிராம்பட்டினம், ஏப்.27
கரோனா  வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை, பொதுமக்கள் ஒரே பகுதியில் கூட்டம் கூடுவதைத் தவிா்த்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு, அதிராம்பட்டினம் பகுதியில் இயங்கும் பால், மருந்து, மளிகை, காய்கனி, கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், சேதுரோடு, பெரிய தைக்கால் தெரு, சின்ன மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த மளிகைக்கடைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் 5 கடைகளுக்கு பூட்டு போட பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு உத்தரவிட்டாா். அதன்பேரில் 5 கடைகளுக்கும் பூட்டு போடப்பட்டு மறு உத்தரவு வரும்வரை கடைகளை திறக்கக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.