அதிராம்பட்டினம், ஏப்.22
அதிராம்பட்டினத்தில் நடைபெறும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை தஞ்சாவூர் மண்டல கரோனா தடுப்புக்குழு அலுவலர் எம்.எஸ். சண்முகம் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினத்தில் கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும், இங்குள்ள தற்காலிக காய்கறி சந்தைகள், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அரசு அறிவுறுத்தலின்படி வணிக நிறுவனங்களின் வாசலில் மக்கள் கை கழுவ வாளியில் தண்ணீர், கிருமி நாசினி, சோப்பு போன்றவை வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது, அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் காவலர்கள், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை பாராட்டிய அவர் இப்பணிகளை தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரவீந்திரன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி (பொ) சுப்பிரமணியன், வட்டாட்சியர் சா. அருள் பிரகாசம், அதிரை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன், அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, காவல் உதவி ஆய்வாளர்கள் பழனிவேல், பிரதிப், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், வட்டார மருத்துவ அலுவலர் ரஞ்சித், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.