நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிராம்பட்டினம் பகுதி நாட்டுப்படகு மீனவர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டதால் 3500 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தஞ்சை மாவட்டம், கடற்கரைப் பகுதி தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரையில் உள்ளன. இந்த பகுதியில் 37 மீன்பிடி தளங்களில் 1200 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே இவர்களது வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் துவங்கிய நிலையில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டு நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஏப்ரல் 15 முதல் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களில் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடித்து வரும் நிலையில் 3500 குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர்.
இந்நிலையில் இந்த மூன்று கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு மட்டும் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மற்ற கிராமங்களைச் சேர்ந்த அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு இந்த கிராமத்து மீனவர்கள் இடையே இருந்துவருகிறது. இதற்கு அதிகாரிகள் கூறும் காரணம் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா நோய்த் தொற்று இருப்பதாக கண்டறியப் பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்களை மீன் பிடிக்கச் செல்ல அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுவதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தொற்று இருக்கும் இடத்தில் இருந்து தங்களது கிராமம் அதிக தொலைவில் உள்ளது. அதேபோல நோய் தொற்று இருக்கும் பகுதியில் இருந்து மிக அருகில் உள்ளகிராமங்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டு எங்களை அதிகாரிகள் வேண்டுமென்றே பழிவாங்குவதாக இப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வரும் நிலையில் தங்களது குடும்பங்கள் வறுமையில் வாடி வருவதாகவும் பட்டினியில் தவிப்பதாகவும் மிக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாங்கள் கடற்கரையோரம் வசித்து வருகிறோம் கடலில் அரசு விதிகளின்படி குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தான் மீன்பிடிக்க செல்கின்றோம். அப்படியே மீன்பிடிக்கச் சென்றாலும் மீன்பிடித்து விட்டு வரும் பொழுது துறை முகத்திலேயே அந்த மீன்களை விற்பனை செய்து விட்டு நாங்கள் வந்து விடுவோம். இதனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்கப்போவதில்லை எனவே உடனடியாக அரசு தலையிட்டு எங்களது மூன்று கிராம மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.