.

Pages

Monday, April 13, 2020

அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட்டில் மீன் விற்பனை தற்காலிக நிறுத்தம்!

அதிராம்பட்டினம், ஏப்.13
அதிராம்பட்டினம் கடைத்தெரு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் மீன் விற்பனைக் கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

அதிராம்பட்டினத்தில் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவுறுத்தி இருந்தார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், தக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் நிா்வாகம் சாா்பில் கடைத்தெரு மீன் மாா்க்கெட் பிரதான நுழைவுப் பாதையைத் தவிர, எஞ்சிய அனைத்துப் பாதைகளும் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.

இந்நிலையில், தக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் நிர்வாகத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன் தலைமையில், டிரஸ்ட் நிர்வாகிகள், மீன் மார்க்கெட் பகுதியை இன்று திங்கட்கிழமை காலை ஆய்வு செய்தனர். பின்னர், மீன் விற்பனை கூடத்தில் கூட்டம் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதத்தில், மீன் வியாபரிகளிடம் மீன் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, மீன் வியாபாரிகள் மீன் விற்பனையை நிறுத்தி வைத்தனர். இதனால், மீன் விற்பனைக் கூடம் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும், முன்னெச்சரிக்கையாக கடைத்தெரு மார்கெட் பகுதியில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிா்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன் கேட்டுக்கொண்டனர். ஆய்வின்போது, தக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் நிர்வாகிகள் ஜெமீல் முகமது, ஏ.சாகுல் ஹமீது, அயூப்கான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.