.

Pages

Sunday, April 5, 2020

TNTJ சார்பில் அதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 25 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், ஏப்.05
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-2 சார்பில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் 144 தடை உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் அன்றாட கூலித் தொழிலாளர்களின் 20 குடும்பங்களுக்கு, முதல் கட்டமாக, தலா 10 கிலோ வீதம் அரிசி, மைதா, ரவா, கோதுமை, சேமியா, சீனி, ஆயில், நாட்டுச்சக்கரை, பருப்பு, தேயிலை, இஞ்சி, பூண்டு, ஜீரகம், சோம்பு, மிளகு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ரூ. ஆயிரம் மதிப்பிலான, 18 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2 ஆம் கட்டமாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த 25 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பகுதியில் தேவையுடையோர் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்காணும் கிளை நிர்வாகிகளின் அலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
9629533887
9952075788
7358364643
8838370094
7904343761
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.