.

Pages

Sunday, April 12, 2020

அதிராம்பட்டினத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் PFI தன்னார்வலர்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.12
கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக ஈடுபட்டனர்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கும், பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிக் குழு, உணவின்றி தவித்த மக்களுக்கு உணவுப்பொருட்கள், சுகாதாரத் துறை அலுவலருடன் இணைந்து கரோனா வைரஸ் தடுப்பு கணக்கெடுப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அவ்வமைப்பின், அதிராம்பட்டினம் ஏரியா சார்பில்,  அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் மக்கள் பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில், அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.