![]() |
கே.ராஜிக் முகமது |
முஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை மீது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது;
நேற்று (ஏப்.10) வெள்ளிக்கிழமை முத்துப்பேட்டை ரியாஸ் என்பவர் தனது கர்ப்பிணி மனைவியின் பிரசவத்திற்கு பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முஸ்லீம்களுக்கு பிரசவம் பார்க்க முடியாது எனக் கூறி வேறு எங்காவது சென்று பார்த்துக்கொள்ளும்படி சொல்ல, மிகவும் மன வேதனையுடன் அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தனை மாதங்கள் பார்த்து வந்த மருத்துவர் இப்படி நடந்துகொண்டதால் மிகவும் மனஉளைச்சல் அடைந்துள்ளார். இஸ்லாமியர்களை மனரீதியாக புண்படுத்தும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் நடத்துகொண்டது. இதனால், பிற சமூக மக்களின் பார்வை, முஸ்லீம்கள் மீது பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பான முயற்ச்சி வாழ்த்துக்கள். இந்த புகார் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து கண்கானிக்கவும்
ReplyDeleteWell try and I hope the respected collector will take action on this humanless hospital.
ReplyDelete