தஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இருந்து இதுவரையில் 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 54 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில், அதிராம்பட்டினம், கும்பகோணம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு நபர்கள் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று (ஏப்.23) கும்பகோணத்தை சேர்ந்த ஒரு நபரும், தஞ்சாவூர் நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும், ஒரத்தநாடு ஊரணிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்பு குழு காவல்துறை தலைவர் சாரங்கன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் திருமதி.குமுதா லிங்கராஜ் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் குணம் அடைந்தவர்களுக்கு பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
மேலும் குணமடைந்து வீடு செல்லும் மூன்று நபர்களும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
Masha Allah....
ReplyDelete