அதிராம்பட்டினம், ஏப்.24
ஊரடங்கு காலத்தில் அதிராம்பட்டினம் பொதுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்.எம்.எஸ் ரபி அகமது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களை இன்று (ஏப்.24) வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார். அப்போது, எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எம்.எம்.எஸ் முகமது இக்பால், எம்.எம்.எஸ் சம்சுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினத்தில் மூடப்பட்டிருக்கும் இந்தியன் வங்கி கிளையை உடனடியாக திறக்கவும், அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பி, முழு நேரமும் இயங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு அறிவித்திருக்கும் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறப்பதற்கான நேரம், காலை 6 மணி முதல், பகல் 1 மணி வரை அமலில் இருந்து வருகிறது. இதுதவிர கூடுதலாக, (இசுலாமியர்களின் புனிதமிகு ரமலான் நோன்பு மாதத்தில் மட்டும்) மக்கள் பயன்படுத்தக்கூடிய நேரமான மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் சோதனைச்சாவடிகள் வழியாக அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு எவ்வித தடையுமின்றி அதிராம்பட்டினம் பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்களிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.