.

Pages

Thursday, April 16, 2020

அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 2 ம் கட்டமாக 58 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.16
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் அன்றாட கூலித் தொழிலாளர்களின் 58 குடும்பங்களுக்கு, எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், இரண்டாம் கட்டமாக, அரசி, பருப்பு, டீதூள், ஆயில், சேமியா, பொட்டுக்கடலை, உளுந்து, புளி, ஜீரகம், சோம்பு, மஞ்சள் தூள், உப்பு, பிஸ்கட், காய்கறிகள் உள்ளிட்ட 15 வகை உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு கடந்த ஏப்.11,12,13 ஆகிய 3 தினங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

இப்பணிகளை, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் என். முகமது புஹாரி, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் என்.எம்.எஸ் ஷாபிர் அகமது, செயலாளர் ஷாகுல், செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் ஆகியோர் செய்தனர்.

அக்கட்சியின் சார்பில், முதல்கட்டமாக 32 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.