.

Pages

Thursday, April 23, 2020

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், ஏப்.23
கரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக செய்துவரும் கொள்ளுக்காடு ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள கொள்ளுக்காடு ஊராட்சி. இந்த பகுதியில் விவசாயிகள் மீனவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு அறிவித்த ஊரடங்கு சட்டத்தை முறையாக பின்பற்றி வருவதோடு இங்குள்ள மக்கள் சமூக விதிகளை கடைபிடித்து வருகின்றனர் மேலும் இந்த ஊராட்சி நிர்வாகம் தூய்மைப் பணி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்ப நாள் முதலே மிகச்சிறப்பாக செய்துவந்தனர் ஊரின் அனைத்து பகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைத்து ஊருக்குள் வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்து அவர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி வருகின்றனர். சிறப்பாக தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சாமியப்பன் மற்றும் துணைத்தலைவர் சுனில் அமலன் ஆகியோர் நிவாரணப் பொருட்கள் வழங்கியதோடு அவர்களை பாராட்டி கௌரவித்தனர். இந்த நிலையில் இந்த ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் தீவிரமாக எடுத்து வருவதை அறிந்த ஊராட்சி அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் மற்றும் துணை ஆணையர் கண்ணன் ஆகியோர் கொள்ளுக்காடு ஊராட்சிக்கு நேரடியாக வந்து ஊராட்சி நிர்வாகிகளை பாராட்டினர்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற செயலாளர் ராஜமாணிக்கம் கருப்பு என்கிற அந்தோணி பிச்சை மற்றும் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிகாரிகளின் பாராட்டு எங்களுக்கு ஒரு மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளது அரசு எப்பொழுது ஊரடங்கை விளக்கிக் கொள்ளச் சொல்கிறதோ அதுநாள் வரை நாங்கள் முறையாக இந்த தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு சமூக விதிகளை கடைபிடிப்போம் என்று இந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.