.

Pages

Sunday, April 12, 2020

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்தல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.12
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது என பொழுதை வீணாக கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி LKG முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்தல் தொடங்கி உள்ளது. இதில், பள்ளித் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் மேற்பார்வையில், பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் ஓய்வில் இருக்கும் மாணவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் கல்வி மேம்பாடு, எழுத்துப்பயற்சி, புத்தக வாசிப்புப்பயிற்சி, நல்லொழுக்கப்பயிற்சி, உடல் ஆரோக்கியப் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை, செயல்விளக்கப் பயற்சி மற்றும் தேகப்பயிற்சி ஆகியவை குறித்து பாடங்கள் காணொளி மூலம் நடத்தப்படுகின்றன. பெற்றோர்கள் கண்காணிப்பில் மாணவர்கள் அவரவர் வீடுகளில் பாடங்களை ஆர்வமாகக் கற்று வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளித் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் கூறியது;
'மாணவர்களின் ஆர்வம் மற்றும் பெற்றோரின் ஈடுபாட்டை பொறுத்து ஒவ்வொரு மாணவரும் நல்ல பலனை அடைய முடியும். கற்கும் பாடப்பிரிவுகள் ஒவ்வொன்றும் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். செல்போன் பயன்பாடு குறைகிறது. நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதில் ஒரு கட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பதால் மாணவர்களோடு, பெற்றோரும் கற்றல் திறனை வளர்த்துக்கொள்ள இயலும். இதன் மூலம் மாணவர்கள் குறித்து நேரத்தில் குறித்த வேலைகளை செய்ய திட்டமிடும்   பழக்கத்திற்கு வந்து விடுவர். நிறைவில், பாடங்களில் கவனம் செலுத்தும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

இவை தற்காலிக ஏற்பாடு எனவும், விடுமுறைக்கு பின், பள்ளி தொடங்கியதும் அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.