.

Pages

Tuesday, April 21, 2020

முதியோர் பராமரிப்புக்கு 'அடையாள அட்டை': மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.21
தஞ்சாவூர் மாவட்ட சமூகநல அலுவலகம், கொரோனா வைரஸால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் விதமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் மூத்த குடிமக்களின் நலன்காக்கும் விதமாகவும் முதியோர்களின் இதயநோய், சர்க்கரை நோய், பிஸியோதெரப்பி சிகிச்சை, இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ உதவிக்காகவும் மற்றும் பிற தேவைகளுக்காகவும் முதியோர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அவர்களை பராமரிப்பாளர்களுக்கு “பராமரிப்பாளர் அடையாள அட்டை” வழங்கப்பட உள்ளது.

இந்த அடையாள அட்டை பெறுவதற்கு பராமரிப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, இரண்டு புகைப்படம், தொலைபேசி எண், வாகன எண் ஆகியவற்றுடன் முதியவரின் மருத்துவ ஆவணங்கள், பெயர், வயது, ஆதார் அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பித்து “பராமரிப்பாளர் அடையாள அட்டை” பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.