.

Pages

Friday, April 17, 2020

அதிராம்பட்டினத்தில் 'ட்ரோன்' கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு (வீடியோ)

அதிராம்பட்டினம், ஏப்.17
அதிராம்பட்டினத்தில் 'ட்ரோன்' கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதா? என்பதை கண்காணிக்கும் வகையில், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன் தலைமையிலான போலீசார், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்ட பகுதிகள், விளையாட்டு மைதானங்கள், மக்கள் கூடும் பகுதிகள் உள்ளிட்ட அதிராம்பட்டினத்தின் பல்வேறு இடங்களில் ட்ரோனை பறக்கவிட்டு, யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சுற்றுகிறார்களா? என கண்காணித்தனர். ட்ரோன் கேமராவில் சிக்கும் நபர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.









No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.