.

Pages

Friday, December 26, 2014

அதிரை பேருந்து நிலையம் - பட்டுக்கோட்டை சாலை ₹ 1.50 கோடியில் மேம்படுத்தும் பணி துவங்கியது!

அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பட்டுகோட்டை செல்லும் ஈசிஆர் இணைப்பு சாலை நீண்ட காலமாக சீர் செய்யப்படாததால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் மிகவும் அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில் அதிரையில் பெய்த தொடர் மழையால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி காணப்பட்டது. இது குறித்து பல்வேறு தரப்பினர் நெடுஞ்சாலை துறையினரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர். இதையடுத்து குண்டு குழியுமாக காட்சியளித்த பகுதியில் கிராவல் ஜல்லி போடப்பட்டது. அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் மீண்டும் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வந்தது. இதனால் சிறு சிறு வாகன விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் அதிரை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில்,'தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார்  ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த [ 13-11-2014 ] அன்று டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், இதற்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கும் தகவலை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் நம்மிடம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இதற்கான முதற்கட்ட பணிகள் இன்று காலை துவங்கியது. அதிரை பேரூந்து நிலைய ஈசிஆர் இணைப்பு சாலையிலிருந்து - பட்டுக்கோட்டை செல்லும் 800 மீட்டர் வரையிலான சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் காவல் துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். இந்த பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதில் நெடுஞ்சாலையின் இருபுற எல்லைகளும் குறியிடப்பட்டது.

பட்டுக்கோட்டை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தீபாகானிக்கார், ஆர்டிஓ அரங்கநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், தாசில்தார் பாஸ்கரன், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

முன்னதாக நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி ஒலிபெருக்கி மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற தவறினால் ஆக்கிரமிப்பின் போது ஏற்படும் செலவீனங்கள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளார்களிடமிருந்து வசூல் செய்யப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாலையை மேம்படுத்தும் முதற்கட்ட பணிகள் இன்று துவங்கியதை அடுத்து இனி அடுத்தடுத்த பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குண்டும் குழியுமாக காட்சியளித்து வந்த சாலையின் பணிகள் துவங்கி இருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.