கடந்த வருடத்தை போல் அதிரையில் நடப்பாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நான்கு பகுதிகளாக தொகுத்து 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு ஒவ்வொரு பகுதிகளாக வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டில் அதிரையில் நடந்த நிகழ்வுகள் ஏராளமாக இருந்தாலும், பதிவின் நீளம் கருதி குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் பதிவதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதில் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 1 எனவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 2 எனவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 3 எனவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 4 என வகை படுத்தப்பட்டுள்ளது.
அதிரை ஜமாத்துல் உலமா சபை சார்பில் வறண்டு காணப்படும் நமதூருக்கு மழை வேண்டி நமதூர் பெரிய ஜும்மா பள்ளியில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் அதிரை அனைத்து மஹல்லாவை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றது.
Friday, April 4, 2014
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் இதுவரையில் கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளார்களில் அதிமுக சார்பில் திரு. கு. பரசுராமனும், திமுக சார்பில் திரு. டிஆர் பாலுவும், காங்கிரஸ் சார்பில் திரு. கிருஷணசாமி வாண்டையாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எஸ். தமிழ்செல்வியும், பிஜேபி சார்பில் கருப்பு (எ) முருகானந்தமும், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் திரு. பழனிராஜனும் இருந்தனர். இந்நிலையில் அதிரையில் வாழும் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக அதிரை நியூஸின் ஆஸ்தான நேர்காணல் ஸ்பெஷலிஸ்ட் சாகுல் ஹமீது தலைமையில் அதிரை நியூஸ் குழுவினர் ஒவ்வொரு பகுதிகளாக சென்று கருத்துகளை பெற்று வழங்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
Thursday, April 10, 2014
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைபள்ளியில் பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் நமதூர் A. தமீமுல் அன்சாரி அவர்களின் மகள் ஆயிஷா சித்திக்கா [ அதிரை அன்வர் அவர்களின் பேத்தி ] நடப்பு கல்வியாண்டில் ஜி.ஆர் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மாநில அளவில் நடத்திய ஆங்கிலப்பாட போட்டியில், தங்கப்பதக்கமும் ரொக்க பரிசும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டுதலை தெரிவித்தார்.
Saturday, April 12, 2014
அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் மல்ஹர்தீன். விற்பனைக்காக தெருவில் கூவிவந்த நாட்டுக்கோழியை சமைப்பதற்காக வியாபாரியிடமிருந்து விலைகொடுத்து வாங்கியுள்ளார். கோழியை அறுத்து உறித்த போது கோழியின் இறைச்சி முழுவதும் கருமை நிறமாக காட்சியளித்தது இவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் கோழி இறைச்சியை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இதனால் இந்தபகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Monday, April 14, 2014
தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் மல்லிபட்டினம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டிட்ட கருப்பு (எ) முருகானந்தம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான பொருட் சேதத்துடன் பலரும் பாதிப்படைந்தனர். கலவரத்தில் போலீஸார் உட்பட காயங்கள் ஏற்பட்ட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்த பகுதி முழுதும் பெரும் பதற்றமாக காணப்பட்டன.
Friday, April 18, 2014
தஞ்சை பாராளுமன்ற தொகுயில் பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் தனது ஆதரவாளர்களுடன் அதிரை பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். முன்னதாக இவரின் வருகைக்காக அதிரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
Monday, April 21, 2014
அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஹாஜா ஷரிஃப். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்படும் இவரை காணாதவர்கள் இல்லை என சொல்லுமளவுக்கு அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர். சற்று மனநிலை பாதிப்படைந்த இவர் அப்போது ஊரில் சில நாட்களாக தென்படாதது அதிரையர்களுக்கு கவலையை வரவழைத்தது. இவரோடு தொடர்புடையவர்கள் இவரை பற்றிய தகவல்களை ஆங்காங்கே விசாரித்தும் வந்தனர். இந்நிலையில் காணாமல் போன சில நாட்களுக்கு பிறகு ஹாஜா ஷரிஃப் மீண்டும் ஊர் திரும்பியதை அடுத்து பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.
Wednesday, April 23, 2014
நமதூரில் 32 ஆண்டுகள் கல்வி பணி ஆற்றி ஓய்வு பெரும் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்களை பற்றி நினைவு கூறும் வகையில் நேற்று மாலை பள்ளியின் சக ஆசிரியர்கள் ஏற்பாடு செய்த பணி நிறைவு பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
Sunday, April 27, 2014
அதிரை – இது சேது பெருவழிச் சாலையில் அமையப் பெற்றிருக்கும் கடற்கரையோர ஊர். இங்கிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தஞ்சாவூர். இவை வரலாற்று நகர், சுற்றுலா நகர், தொழில் நகர் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கூடுதலாக பெற்றிருந்தாலும் 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயரிலும் அழைக்கப்படும் தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள பகுதியில் 'சிவகங்கைப் பூங்கா' அனைவரையும் கவர்ந்து வருகிறது.
Monday, April 28, 2014
அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் [ WFC ] சார்பாக 7 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியினரும் பட்டுக்கோட்டை AVK அணியினரும் மோதினார்கள். இரு அணிகளும் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதியில் WFC அணியினர் வெற்றி பெற்றனர்.
Wednesday, April 30, 2014
அதிரை காட்டுப்பள்ளி தர்ஹா கந்தூரிவிழா தொடர்பாக பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஏற்பாடு இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ADT நிர்வாகிகளும், கந்தூரி விழா கமிட்டியினரும் கலந்துகொண்டார்கள்.
Monday, May 5, 2014
வறண்டு காணப்பட்ட அதிரையில் திடீர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Monday, May 5, 2014
அதிரை கடற்கரைதெருவின் ஜமாத்தினரின் மேற்பார்வையில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து புதிதாக தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தை ஆரம்பித்தனர்.
Friday, May 9, 2014
அதிரை பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு அஸ்லம் அவர்கள் முதல் முறையாக சென்னையில் திமுக வின் மாநில பொருளாளர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
Monday, May 12, 2014
அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குளத்தை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்றன.
Sunday, May 18, 2014
துபாய் நாட்டின் Islamic Affairs & Charitable Activities Department சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை 16-05-2014 அன்று குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி நடத்தியது. இதில் அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த அப்பியான் வீட்டு அப்துல் ஹாதியுடைய மூத்த மகள் சுமையா போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசை தட்டிச்சென்றார். போட்டியில் கலந்துகொண்ட அப்துல் ஹாதியுடைய மற்றொரு மகள் ஆயிஷா ஆறுதல் பரிசை வென்றார்.
Sunday, May 18, 2014
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் இன்று [ 18-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
Monday, May 19, 2014
அதிரை ஈசிஆர் சாலையிலிருந்து நேராக கடற்கரைக்கு செல்லும் கஸ்டம்ஸ் சாலையின் முடிவில் வலதுபுறத்தில் உள்ள கடற்கரையில் அரசுக்கு சொந்தமான சில ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு இந்த பகுதியில் ஏராளமான மணல் குமிந்து சுற்றுலா தளமாக காட்சியளித்தது. சுனாமி தடுப்புக்காக அரசு சார்பில் ஏராளமான சவுக்கு மரங்களும் நடப்பட்டது.
அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த சில நாட்களாக இறால் பண்ணை அமைப்பதற்காக சிலர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். தகவலறிந்த வருவாய் அலுவலர் பழனிவேல், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் ஜோதி, அதிரை காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tuesday, May 20, 2014
அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில மாதங்கள் வரை இதற்காண பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து நடைபெற வேண்டிய முக்கிய பணிகளில் சிலவற்றை கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட குளத்தின் பணிகளை விரைந்து முடித்துதர கோரி கீழத்தெரு சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
Saturday, May 24, 2014
அதிரை வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.
Sunday, May 25, 2014
அதிரையை சேர்ந்தவர்கள் மன்சூர், அஸ்லம், பாசின், நிஜாம். பள்ளித்தோழர்களான இவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை ஒன்றாக முடித்துவிட்டு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இவர்களிடேயே ஒருவருக்கொருவர் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகள் அமையாமல் இருந்து வந்தது. அதிரை புதுமனைத்தெரு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஒன்றிணைந்த இவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆளாளுக்கு வைத்திருந்த ஆன்ட்ராய்டு போன்களில் புகைப்படங்களை எடுத்துதள்ளியது பார்த்தோர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
Tuesday, May 27, 2014
அதிரை ஈசிஆர் சாலையில் கேரளாவை சேர்ந்த பயணிகள் ஏர்வாடியை நோக்கி ஆம்னி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்து அதிரை ஈசிஆர் சாலை பெரிய ஏரி அருகே சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஆவணத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான விஜி ( 29), விக்கி ( 30 ) ஆகிய இருவரும் எதிரே வந்த பேருந்தில் எதிர்பாரதவிதமாக நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தமுமுக ஆம்புலன்ஸ் இறந்த இரு உடல்களையும் பிரத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துசென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிரை போலீசார் விபத்து குறித்து விசாரித்தனர். இதனால் விபத்து நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Wednesday, May 28, 2014
இன்று இரவு 9.30 மணியளவில் மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 20 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் அங்கு கூடியிருந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்கள். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் கொலை வெறி தாக்குதல் நடத்த முடியாமல் திணறிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். இதில் தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்கப்படும் என கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டதாக தெரிகிறது.
கொலை வெறி தாக்குதலில் அர்ஷாத் ( 21 ) , கையிலும் , அமீன் ( 25 ) கழுத்திலும் , மைதீன் ( 28 ), நூருல் அமீன் ( 21 ) ஆகியோருக்கு கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உயிர்க்கு போராடிவரும் இவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டனர்.
மல்லிபட்டினம் ஜமாத்தினர் ஒலிபெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கி கிடந்ததாக அங்கிருந்து வந்த தகவல் தெரிவித்தது. அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.
Sunday, June 1, 2014
அதிரை முத்தம்மாள் தெரு ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட விபத்தில் வாகனம் சாலையோர வாய்க்காலின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் உள்ள ஆயில் டேங் உடைந்து ஆயில் முழுவதும் வெளியேறியது. தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் கவிழ்ந்த வாகனத்தை தூக்கி நிறுத்த உதவினார்கள். வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. வாகனத்தின் ஓட்டுனர் எதிரே வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்காக இடது புறம் ஒதுங்கிய போது தவறுதலாக சாலையோர வாய்க்காலின் பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்பட்டது.
Wednesday, June 11, 2014
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக கடந்த 5 வருடங்களாக பள்ளியின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. பள்ளியின் அருகில் உள்ள கீற்றுக்கொட்டகையில் ஐந்து வேலை தொழுகை நடைபெற்று வந்தது. இப்போது பள்ளியின் கீழ்தள பணிகள் முழுமையடைந்துவிட்டதை தொடர்ந்து பள்ளியின் புதிய கட்டிட்த்தில் 5 வேலை தொழுகை நடைபெற்ற துவங்கியது.
Sunday, June 15, 2014
அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடல்களில் சம்பா நண்டுகள் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. மருத்துவ குணம் கொண்ட இவ்வகை நண்டுகள் 500 கிராம் முதல் 1500 கிராம் வரை எடையளவில் காணப்படுகிறது. மிகவும் சுவையாக இருக்கும் சம்பா நண்டுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிரை கடைத்தெரு மார்கெட்டில் விற்பனைக்காக வந்த சம்பா நண்டுகளை வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர்.
Monday, June 16, 2014
அதிரையில் மனநலம் பாதிப்படைந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அதிரை பகுதிகளில் சில மாதங்கள் சுற்றி திரிந்தார். இவர் கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். அரசு உயர் நிலை பள்ளி எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதியின் புதிய கட்டிடத்தில் மனநிலை பாதித்த பெண் பலத்த சப்தத்துடன் அழுதுகொண்டு இருந்துள்ளார். அழும் குரலை கேட்ட ( 1 ம் நம்பர் ) அரசு உயர்நிலை பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கரோலின், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ( 2 ம் நம்பர் ) ஆசிரியைகள் அருள் ஜோதி, சுப்பு லட்சுமி சத்துணவு பொறுப்பாளர் கிளாரா, ஜீவா ஆகியோர் விரைந்து சென்று வலியால் துடித்து கொண்டிருக்கும் மனநிலை பாதித்த பெண்ணுக்கு முதலுதவி செய்துள்ளனர். பிரசவ வலியால் துடிப்பதை அறிந்து கொண்ட இவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ செவிலியர்கள் வள்ளி மற்றும் அதிரை செட்டிதோப்பு காலனியை சேர்ந்த செவிலியர் சுகன்யா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை சத்து குறைந்தும், எடை குறைவாகவும் காணப்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மனநிலை பாதித்த பெண் மற்றும் அவரது குழந்தை அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Friday, June 20, 2014
அதிரை பேரூராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக போதுமான குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Friday, June 27, 2014
அதிரை பீச் பாய்ஸ் & SSMG ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நமதூர் கடற்கரைதெரு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது. இதில் உள்ளூர் அணிகளான அதிரை AFFA அணியினரும், அதிரை பீச் பாய்ஸ் அணியும் மோதினார்கள். ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்றனர். AFFA அணியின் கேப்டன் அஸ்ரப் 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி தனது அணி இலகுவாக வெற்றிபெற உதவியாக இருந்தார். இந்ததொடர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொய்யாப்பழம் ஆஷிப்புக்கு AFFA நிர்வாகம் சார்பில் கிஃ ப்ட் பேக் பரிசு வழங்கப்பட்டது. ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய அதிரை அணியின் கேப்டன் அசரப்புக்கு செக்கடி மேடு அஹமது ஸ்டோர் அனஸ் ரூபாய் 100 வழங்கினார். சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பில் ரூபாய் 200 வழங்கப்பட்டது.
முன்னதாக இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு கோல் அடிக்கும் நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 'அதிரை நியூஸ்' சார்பில் தலா ரூபாய் வீதம் 100 பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி 3 கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய அதிரை அணியின் கேப்டன் அஸ்ரப்க்கு அதிரை நியூஸ் வழங்கிய ரூபாய் 300 பரிசை முஹம்மது தமீம் ( ABTA ) வழங்கி பாராட்டினார்.
இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் பரிசை அதிரை AFFA அணியினரும், இரண்டாம் பரிசை அதிரை பீச் பாய்ஸ் அணியினரும் அதிரை பேரூராட்சி உறுப்பினர் பசூல்கான், முஹம்மது தமீம் ஆகியோரிடமிருந்து பெற்றனர்.
இந்த ஆண்டில் அதிரையில் நடந்த நிகழ்வுகள் ஏராளமாக இருந்தாலும், பதிவின் நீளம் கருதி குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் பதிவதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதில் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 1 எனவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 2 எனவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 3 எனவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 4 என வகை படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
Thursday, April 3, 2014அதிரை ஜமாத்துல் உலமா சபை சார்பில் வறண்டு காணப்படும் நமதூருக்கு மழை வேண்டி நமதூர் பெரிய ஜும்மா பள்ளியில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் அதிரை அனைத்து மஹல்லாவை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.