காலாகாலத்தில் பெய்ய வேண்டிய பருவ மழை சில ஆண்டுகளில் பொய்த்தும், பல ஆண்டுகளில் பெருக்கெடுத்தும் பெய்வதால் விவசாயத்தில் தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி கேசவ்ராவ் கஞ்சட்டி என்பவர் வாழ வழியறியாமல் வேதனையில் வாடி வந்தார்.
அவரது நிலையை கண்டு பரிதாபப்பட்ட சிலர், ‘பேசாமல் ஏதாவது வெளிநாட்டுக்குப் போய் கூலி வேலை செய்து பிழைப்பது தானே..,’ என்று அவரை உசுப்பேற்றி விட்டனர். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் வேண்டுமே என்று அவர் யோசிப்பதை அறிந்த சில நண்பர்கள் ஐதராபாத்தில் உள்ள ஒரு பாஸ்போர்ட் ஏஜெண்ட்டை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.
கேசவ்ராவ் கஞ்சட்டியிடம் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை போலியாக தயாரித்து தருவதற்கு அந்த ஏஜெண்ட் 25 ஆயிரம் ரூபாய் பேரம் பேசினார். கேசவ்ராவ் கஞ்சட்டியும் அதற்கு சம்மதித்து பணத்தை தந்தார்.
இதனையடுத்து, போலி ஆவணங்கள் மூலம் அவருக்கு அந்த ஏஜெண்ட் பாஸ்போர்ட்டை தயாரித்து தந்தார். அந்த பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவுக்கு செல்லும் ஆசையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்காக அவர் தனது மனைவியுடன் நேற்று வந்திருந்தார்.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலிச் சான்றிதழ்கள் மூலம் பாஸ்போர்ட் எடுத்து, அமெரிக்காவுக்கு செல்ல விசா கேட்டு வந்த கேசவ்ராவ் கஞ்சட்டி சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

File photo
நன்றி:மாலை மலர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.