.

Pages

Sunday, December 21, 2014

மேலத்தெரு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்: TIYA மாலிக் தகவல் !

கடந்த 17-12-2014 அன்று அதிரைநியூஸ் வலைதளத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானம் என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் பதிவு செய்ததை நான் பார்த்தேன், எனது வேலை பழுவின் காரணத்தால் என்னால் உடன் பதில் கொடுக்க முடியவில்லை இந்த மைதான விஷயத்தில் மேலத்தெருவாசிகள் அனைவருக்கும் பொறுப்புண்டு என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இந்த மைதானம் செடிகளால் மண்டிக்காணப்படுவது அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பெரும் வருத்தமும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மைதான்.

அந்த வரிசையில் கடந்த 10 தினங்களுக்கு முன் இது விஷயமாக ஊரிலிருந்து காதர் என்கின்ற  சகோதரர் என்னை தொடர்பு கொண்டார் நான் உடன் தாயக TIYA நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினேன் மழை விட்டு விட்டு பெய்ந்து கொண்டுள்ளதால் ஒன்றும் செய்ய முடியவில்லை மழை நின்றது விரைவில் அதை சரி செய்யலாமென்று கூறியுள்ளனர். எனவே, இது விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்திகொண்டுதான் உள்ளோம் என்ற தகவலை அறியத் தருகின்றோம்.

இன்ஷா அல்லாஹ்  மழை விட்ட ஒரு வார காலத்திற்குள்  இது விஷயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
TIYA நிர்வாகம்

3 comments:

  1. முயற்சிக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    சகோதர தெருவாகிய மேலத்தெரு சகோதரர்கள் தங்கள் பகுதியில் ‎இருக்கும் ஒவ்வொரு குறைகளையும் கண்டறிந்து அதை நீக்கும் ‎முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தன் வீட்டைப்போன்று ‎நினைத்து செய்கின்றனர். இதுபோல் ஏனைய தெரு சகோதரர்களும் ‎முயற்ச்சித்து செய்து வந்தால், இந்த ஊரே எந்த ஒரு குறைகளும் ‎இல்லாமல் தெளிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. பேரூராட்சி நிர்வாக கட்டமைப்பு கேள்விக்குறியாகிவிடும்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.