ஊடகத்துறை என்பது சமூகத்தில் நடைபெறும் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கும் சென்றடைந்து அதற்குரிய தீர்வும் எட்டுகிறது. இதனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது.
இத்தகைய ஊடகத்தை சமூகத்தினர் பயன்படுத்தி சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு போன்ற நல்ல நோக்கங்களுக்காக சரித்திரம் படைக்க இளம் தலைமுறையினர் சவால் நிறைந்த ஊடகங்களில் அடியெடுத்து வைத்து சாதிப்பதற்கு தயாராக வேண்டும் !
இதற்கு எடுத்துக்காட்டாக நமதூரைச் சேர்ந்த பிரபல பதிவர்கள் மின்னணு துறையாகிய இணையதளத்தைப் பயன்படுத்தி சமூகம், கல்வி, அரசியல் போன்றவற்றை சார்ந்த விழிப்புணர்வு ஆக்கங்கள், மார்க்க விளக்கங்கள், முக்கிய நிகழ்வுகள், சிந்தணையத் தூண்டும் செய்திகள், உடல் நல குறிப்புகள், விளையாட்டு செய்திகள், அறிவிப்புகள், வரலாற்று ஆய்வுகள், அழகிய கவிதைகள், புகைப்படங்கள், காணொளிகள், கடிதங்கள் ஆகியவற்றை அவரவர்களின் தனித்தன்மையுடன் பிறர் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இணையதளங்கள் மற்றும் வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இவற்றை வாசிக்கும் பலர் நன்மையும் அடைகின்றனர்.
சரி விசயத்திற்கு வருவோம்...
1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
ஆகிய கேள்விகளை முன்வைத்து நமதூரின் பிரபல எழுத்தாளார், 'பன்னூல் ஆசிரியர்' அதிரை அஹ்மது அவர்களை கடந்த [ 26-08-2012 ] அன்று அவர்களின் இல்லத்தில் சந்தித்து கருத்துகளை பெற்று காணொளியில் பதிந்தோம்.
காணொளியை காண்பதற்கு முன்னதாக...
இவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
“தமிழ் அறிஞர்” என்று இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற மூத்த சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் மார்க்கப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி ஆகியவற்றில் மூழ்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் நமதூருக்கு பெருமை சேர்க்கும் அளவு பல புத்தகங்களை எழுதிருப்பவர் குறிப்பாக இஸ்லாமிய இலக்கிய சிந்தனை, இஸ்லாம் ஓர் அறிமுகம், மழைப்பாட்டு உரை, ஒருமைப்பாட்டு, சிறுமிப்பாட்டு, பெண்மணி மாலை, அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன், நபி வரலாறு சிறுவருக்கு, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் ஓன்று, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் இரண்டு, வட்டியை ஒழிப்போம், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்), தமிழ்மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட ஆங்கில நூல்களாகிய Salma Al Farisi, Khabbab Bin Aratt, Abu Zar Ghifari, Abu Abdullaah Zubair Bin Al Awaam, Miqdad Bin ‘Amr Al Aswad’, தன்னால் எழுதப்பட்ட ஆங்கில நூலாகிய Wisdom in the Dawn மற்றும் அதன் தமிழாக்கம் இளமை பருவத்திலே போன்ற நூல்களும், அதிரை வலைதளங்களில் ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ மற்றும் ‘கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை’ ஆகிய நெடுந்தொடர்களும், பல கவிதைகளும் எழுதியுள்ளார். மேலும் பல நூல்களுக்கு முன்னுரை, கருத்துரை வழங்கியுள்ளார் என்பது இவரது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅஹமது காக்கா உங்களின் அறிவுரைக்கு மிக நன்றி காக்காவின் அமைதியும் ஏழையும் எனக்கு ரொப்ப பிடிக்கும் காக்கா முதன் முதலில் எனக்கு அறிமுகமானது 1990 சவூதியிதான் அன்று முதல் இன்று வரை எனக்கு ரொப பிடித்த மனிதர் எல்லாம் வல்ல இறைவன் காக்காவின் ஆயுலை நோய் நொடி இல்லாமல் நீடித்த வைக்கவேண்டுமென்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் நான் கண்ட நல்ல மனிதர்களில் வரிசையில் காக்கா அவர்களுக்கு முதல் இடம்.
என்றும் அன்புடன்
அதிரை அல்மாஸ்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அதிரை அஹ்மது காக்கா அவர்களின் பல நூல்களை நான் படித்திராவிடின், ஒரு சிலதை படித்துள்ளேன், எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அவர்களின் கருத்து எழுத்து நடையாக வந்து கொண்டு இருக்கின்றது.
ஆனாலும், அவர்களின் அமைதித்தன்மை இருக்கின்றதே அதை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. கடிகாரம் மெதுவாகத்தான் நகருகின்றது, இருந்தாலும் அதன் பணி இந்த உலகத்திற்கு மிக மிக இன்றியமையாதது. அதுபோலவே அதிரை அஹ்மது காக்காவின் சமூகம் சார்ந்த இந்தப் பணியும் சமுதாயத்திற்கு இன்றியமையாதது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். .
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
மூத்த சகோதரர் அதிரை அஹமது அவர்களை இதுவரை நான் நேரில் சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் அவர்களுடைய கவி ஆற்றல் எழுத்தாற்றலைப் பற்றி எனது நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ReplyDeleteதாங்களைப் போன்ற அன்பவ சாலிகளின் ஆரோக்கியமான நல்லுபதேசமும் அறிவுரைகளும் அவசியம் தேவை. நல்ல பல தகவல்களையும் அறிவுரைகளையும் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியின் பக்கம் செல்ல அருள் செய்வானாக ஆமீன் .
அதிரை அஹமத் காக்க சிறந்த எழுத்தாற்றல் உள்ள அன்பான அமைதியான மனிதர்,எளிய நடையில் அனைவரும் புரியும் வண்ணம் பல நூல் எழுதிய பன்னூலாசிரியர்.நான் அவர்களது வீட்டில் சந்தித்த பொழுது சில நூல்களை பரிசுலளித்துல்லார்கள்.மார்க்க அறிவும் நிகழ்கால சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் சமுதாய பணியாற்றும் சமுதாய சிந்தனையாளர்.அவர்களுடான சந்திப்பு மனதிற்கு சந்தோசமும் உத்வேகமும் அளிக்கும் வகையில் அன்பான அறியுரை,மாற்றுக்கருத்து கொண்டோரையும் மதிக்கும் மாண்பு,ஏற்றுக்கொண்ட ஏகத்துவ கொள்கையில் உறுதி
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தியும் வழங்கட்டுமாக
Lets Pray Almighty ALLAH to strengthen Adirai MBA kaka in all aspects
ReplyDelete