.

Pages

Sunday, December 21, 2014

ரயிலில் குடிகார வாலிபர்களிடம் சிக்கிய தங்கை: டுவிட்டர் மூலம் காப்பாற்றிய அண்ணன் !

பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவரை, ஓடும் ரயிலில் குடித்து விட்டு கேலி செய்த நபர்கள் டுவிட்டரின் உதவியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கமித்ரா ரயிலில் பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பெட்டியில் பயணித்த மூன்று வாலிபர்கள் பயணம் துவங்கிய சிறிது நேரத்தில் மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது கைப்பேசியில் அவர்கள் மது குடிப்பதை புகைப்படம் எடுத்ததோடு அதை தனது அண்ணன் அன்குர்சிங்கிற்கு அனுப்பி உதவி கேட்டுள்ளார்.

இதைப்பார்த்த அன்குர்சிங், தங்கை அனுப்பிய புகைபடங்களையும், ரயில் விவரத்தையும் டுவிட்டரில் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு மற்றும், ரயில்வே அமைச்சக டுவிட்டர் அக்கவுண்டுகளுக்கு மென்ஷன் செய்து பதிவேற்றியுள்ளார்.

இதனையடுத்து ரயில்வே அமைச்சக டுவிட்டர் தளத்தை பாலோ செய்யும் பயனாளிகள் பலரும் இதை பார்த்து உடனடியாக அன்குர்சிங்கிற்கு டுவிட் செய்துள்ளனர்.

இந்த தகவல் காவல்துறையினரின் கவனத்திற்கு வந்ததும், அடுத்த ரயில் நிலையத்திலேயே குறிப்பிட்ட பெட்டியில் ஏறிய பொலிசார், மது பான பாட்டிலுடன் இருந்த வாலிபர்களை பிடித்து வெளியே இழுத்து சென்றனர்.

மேலும், ஓடும் ரயிலில் மது குடித்தது, பெண்ணை கேலி செய்தது போன்ற வழக்குகள் அந்த வாலிபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

நியூ இந்தியா நியூஸ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.