இந்நிலையில் அதிரை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில்,'தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார் ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த [ 13-11-2014 ] அன்று டெண்டர் விடப்பட்டது.
இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று காலை துவங்கியது. அதிரை பேரூந்து நிலைய ஈசிஆர் இணைப்பு சாலையிலிருந்து - பட்டுக்கோட்டை செல்லும் 800 மீட்டர் வரையிலான சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் காவல் துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். இந்த பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலையின் இருபுற எல்லைகளும் குறியிடப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தீபாகானிக்கார், ஆர்டிஓ அரங்கநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், தாசில்தார் பாஸ்கரன், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையை பெயர்த்து எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அறுமை
ReplyDelete