.

Pages

Tuesday, December 23, 2014

சென்னையில் மீலாது விழா நிகழ்ச்சி !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மீலாது விழா நிகழ்ச்சி சென்னை தலைமையகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கே எஸ் நவாஸ் கனி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம் அபூபக்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொய்தீன், கவிஞர் மவ்லவி தேங்கை சரபுதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் இறைத்தூதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை நெறிமுறை மற்றும் இவர்கள் ஆற்றிய தியாகங்கள் குறித்து பேசப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் திரு. திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில, மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

5 comments:

  1. Arumaiyana pathevu
    manichchda paththerekai el
    varum mun entha seai theyai
    veale etda adirai news sukku
    vaalththukkal

    ReplyDelete
  2. முஸ்லிம்லீக்குக்கும் இஸ்லாத்திற்கு
    உள்ள தொடர்பு மீலாதுவிழா தான் பாக்கி எல்லா நல்லறங்களையும் அரசியலுக்கு
    அடகாகிவிட்டது பாவம் சமுதாயத்தில் முகத்தை காட்டவேண்டும்மல்லவா?

    ReplyDelete
  3. காங்கிரஸ் கட்சியின் செயலர் திரு திருநாவுக்கரசர் தனது கருதுக்களை அவருடைய இணைய தளத்திலும், முகநூளிலும் தெரிவித்து வருகிறார். அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்டது. எனவே, அவற்றை நீங்கள் வெளியிடவேண்டும்.
    http://sthirunavukkarasar.blogspot.in/2014/12/blog-post_52.html
    https://www.facebook.com/Su.Thirunavukkarasar

    ReplyDelete
  4. இறைத்தூதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை நெறிமுறை மற்றும் இவர்கள் ஆற்றிய தியாகங்கள் குறித்து பேசப்பட்டது.//

    பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறை மற்றும் அவர்கள் ஆற்றிய தியாகங்கள் குறித்து இஸ்லாமியர்கள்தானே பேச வேண்டும். அதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேசுவது அதன் கடமை. இஸ்லாத்தை இஸ்லாமியன் பேசினால் அதில் தெளிவுகள் இருக்கும். சகோதர மதத்தவர்கள் பேசினால் அவர்களும் இதெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றார்களே என்று இஸ்லாமியர்களுக்கு சந்தோசம் மட்டும் ஏற்படும். பின்னால் இவ்வாறு மீலாது விழாவில் பேசியவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை அறிந்து அவர்கள் வழி இஸ்லாம் ஏற்றதை சரிந்திரம் அறிந்தவர்கள் அறிவார்கள். இதைக்கண்டு எரிச்சல் அடைந்தால் தன் நிலை என்னவென்பதை தானே பரிசோதிக்கவேண்டும். பெருமானாரை (ஸல்) நினைவுக்கூறாவிட்டால் இஸ்லாம் கேள்விக்குறியே !?

    ReplyDelete
  5. //முஸ்லிம்லீக்குக்கும் இஸ்லாத்திற்கு
    உள்ள தொடர்பு மீலாதுவிழா தான் பாக்கி எல்லா நல்லறங்களையும் அரசியலுக்கு
    அடகாகிவிட்டது பாவம் சமுதாயத்தில் முகத்தை காட்டவேண்டும்மல்லவா?//

    மேடையில் அமர்ந்திருப்பவர்கள், விழாவில் கலந்துக்கொண்டவர்கள் எல்லாரையும் அதிரை நியூஸ் தெளிவாகவே படம் பிடித்துப் போட்டுள்ளது. அவர்களைப் பார்த்து இவர்கள் எல்லா நல்லறங்களையும் விட்டவர் என்று எப்படிக் கூறமுடியும் !

    சமுதாயத்தில் இவர்கள் முகம் காட்டாத்ததனால் இவ்வாறெல்லாம் சிலர் எழுத நேரிடுகிறது. இவர்கள் ஏன்? முகம் காட்ட வேண்டும். நான் செய்தேன் என்று விளம்பரப்படுத்தவா? தன்னை விளம்பரபடுத்தி எந்த ஆதாயத்தை அடைய வேண்டும் ? இவர்கள் ஆதாதயம் சமுதாயத்திற்கு மட்டுமே என்று வாழ்பவர்கள் என்பதே நாம் மறக்கவேண்டாம் நண்பர்களே.

    எல்லா நல்லறங்களும் உண்டாக பெருமானார் (ஸல்) அவர்கள் வழியைத் மனிதன் தெரிய வேண்டியது அவசியமே. அதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்வது சரியே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.